Janu / 2026 மார்ச் 02 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு துறைமுக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துறைமுக நகர (Port City) வளாகத்திலுள்ள போர்ட் ஹார்பர் நிறுவனத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (01) காலை மீட்கப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
துறைமுக நகரத்தில் சனிக்கிழமை (28) இரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக குறித்த இளைஞன் வருகை தந்திருந்தமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சடலம் மீதான மரண பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
கொழும்பு துறைமுக பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
14 minute ago
27 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
31 minute ago
1 hours ago