2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

கோட்டா இதுவரை அரசியல் அடைக்கலம் கோரவில்லை

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 10 , பி.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு தாய்லாந்துக்குள் நுழைவதற்கான அனுமதியை வழங்குமாறு, இலங்கை அரசே கோரிக்கை விடுத்ததென, தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இரண்டு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால உறவை கருத்தில்கொண்டு இந்த கோரிக்கை குறித்து ஆராய்வதாக தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜதந்திர உரிமம் இருப்பதால் முன்னாள் ஜனாதிபதிக்கு வீசாவுடன் 90 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருக்கவும் 2013ஆம் ஆண்டு தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய, அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதுவரை எவ்வித அரசியல் அடைக்கலம்  கோரிவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ஸ நாளைய தினம் தாய்லாந்து நோக்கி செல்லவுள்ளார் என ரொய்டர் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X