2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கோட்டாபயவுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை

Freelancer   / 2022 ஓகஸ்ட் 18 , பி.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பாக நாடு திரும்பவும், அவருக்கு தேவையான பாதுகாப்பு உட்பட ஏனைய வசதிகளை வழங்குமாறும் ஜனாதிபதியிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்த்து நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பூரண ஆதரவை வழங்கும் என தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .