2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கோட்டாவின் வீட்டுக்குச் சென்ற ஜனாதிபதி ரணில்

Editorial   / 2022 செப்டெம்பர் 12 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அந்நாட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டை விட்டு ஓடினார்.

மேலும் ராஜபக்‌ஷ குடும்பத்தை சேர்ந்த அனைவரும் பதவியை விட்டு விலகினர். இலங்கை நெருக்கடியை தீர்க்க புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்றார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்தில் தஞ்சம் அடைந்திருந்த கோட்டாபய ராஜபக்‌ஷ இலங்கை திரும்பினார்.

அவர் தற்போது கொழும்பில் உள்ள அரசு பங்களாவில் தங்கி உள்ளார்.

பொதுமக்கள் மீண்டும் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்கும் வகையில் பங்களாவை சுற்றி பாதுகாப்புக்காக இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அவரை பாதுகாக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

 இதற்கிடையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோட்டாபய ராஜபக்‌ஷ தங்கி உள்ள வீட்டுக்கு நேற்று (11) நேரில் சென்று சந்தித்தார்.

அப்போது அவர்கள் இரண்டு பேரும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், பொருளாதார நெருக்கடி சூழல் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இலங்கையில் விரைவில் 12 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர். இதில் மஹிந்த ராஜபக்‌ஷவின் மூத்த மகன் நாமல் ராஜபக்‌ஷவுக்கும்  அமைச்சர்  பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை சந்தித்து பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதன் மூலம் மீண்டும் இலங்கையில் ராஜபக்‌ஷ குடும்பத்தினரின் ஆதிக்கம் தலை தூக்கலாம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் பொது மக்கள் மறுபடியும் போராட்டம் நடத்தலாம் என்ற நிலை உருவாகி உள்ளது என்றும் மாலை மலர் செய்தி வெளியிட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .