2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கோதுமை மாவை இறக்குமதி செய்ய அரசாங்கம் முயற்சி

Freelancer   / 2022 செப்டெம்பர் 11 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கி மற்றும் துபாயில் இருந்து கடன் அடிப்படையில் கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே பாண் மற்றும் கோதுமை மா சார்ந்த பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கான திட்டத்தை நிறுத்துமாறு வெதுப்பக வர்த்தகர்களுக்கு வர்த்தக அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

கோதுமை மா இறக்குமதிக்கான கடன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் வரை அடுத்த இரண்டு வாரங்களுக்கு விலை அதிகரிப்பை  நிறுத்துமாறு வெதுப்பக உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .