2026 மே 04, திங்கட்கிழமை

கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும்?

R.Maheshwary   / 2021 மார்ச் 31 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

' சந்தையில் உருவாக்கப்பட்டிருக்கும் வர்த்தக மாஃபியா காரணமாக, பண்டிகை காலங்களில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை  800 ரூபாயை தாண்டக்கூடும்' என அனைத்து இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்தார்.
 
விலங்கு தீவனத்தின் விலை அதிகரிப்பு காரணமாக, உற்பத்தியாளர்கள் சாதாரண விலையில் இறைச்சி வழங்குவதிலிருந்து விலகுகிறார்கள் எனவும் சந்தையில் கோழி பற்றாக்குறையை உருவாக்க ஐந்து பெரிய தொழில் முனைவோர் முயற்சிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
 
இந்நிலையில், வரும் பண்டிகை காலங்களில், கோழி இறைச்சியின் விலையை அதிகரிப்பதற்கு இறைச்சிக்கான பற்றாக்குறையை  பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
 
தற்போது ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் சந்தை விலை 550-600 ரூபாய் வரையிலும், ஒரு முட்டையின் மொத்த விலை 12 ரூபாயாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .