2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

கோவை குண்டு வெடிப்பில் 6 ஆவது நபர் கைது: அதிரடி திருப்பம்

Freelancer   / 2022 ஒக்டோபர் 27 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தின் கோவை பகுதியிலுள்ள கோவில் ஒன்றிற்கு முன்பாக இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதன்மூலம் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் தனிப்படை பொலிஸார், அப்சர் காண் என்ற இந்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினரே, அப்சர் காண் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X