Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
யுத்த காலத்தில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கபட்டு, இன்னும் விடுவிக்கப்படாதிருக்கும் செட்டிகுளப் பிரதேச எல்லைக்குட்பட்ட மக்களின் குடியிருப்புக் காணிகளையும் வயற் காணிகளையும்
இராணுவம் அவசரமாக விடுவிக்க வேண்டுமென, காத்திரமான தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது.
நேற்று (13) இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம், இணைத் தலைவர்களான அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், மஸ்தான் எம் பி, வடமாகாண அமைச்சர் சத்தியலிங்கம், ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இந்த விவகாரம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பேச்சுநடத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுப்பதெனவும் முடிவெடுக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் சார்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்தப் பிரச்சினையைச் சுட்டிக்காட்டி இதற்குப் பொருத்தமான தீர்வுகளை மேற்கொள்ளுமாறு விடுத்த வேண்டுகோளையடுத்தே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
செட்டிகுளம் பிரதேசத்திலுள்ள பல்வேறு வளங்களை இனங்கண்டு அதிகாரிகளும் அமைப்புக்களும் இணைந்து முறையான திட்டமொன்றை தமக்கு வழங்கினால் பொருத்தமான சிறு கைத்மொழில் திட்டங்களை மேற்கொள்வதற்கு தனது அமைச்சு பல வழிகளிலும் உதவக்காத்திருப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு தெரிவித்தார்.
இது தொடர்பில் ஒருமாத காலத்துக்குள் திட்டங்களைத் தயாரித்து வழங்கினால் அதனை ஆரம்பிப்பதற்கு வசதியாக இருக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மீளக்குடியேறிவோருக்கு வீடமைப்பதற்காக வழங்கப்படுகின்ற ரூபாய் எட்டு இலட்சம் போதுமானதல்ல என்று அங்கு தெரிவிக்கப்பட்டது. அந்தத் தொகையினை பத்து இலட்சம் ரூபாயாக அதிகரிக்க முடியுமா என்பது தொடர்பில் தான் உயர்மட்டத்தில் பேச்சு நடத்துவாக அமைச்சர் கூறினார்.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago