2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சாந்தினி இராஜினாமா?

Kanagaraj   / 2017 ஜனவரி 12 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் மறைந்த பெரியசாமி சந்திரசேகரின் பாரியார், சாந்தினி சந்திரசேகரன், முன்னணியின் போசகர் பதவியிலிருந்து இன்று வியாழக்கிழமை இராஜினாமா செய்துகொள்ளவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

முன்னணியின் மத்தியக்குழு கூட்டம், இன்று மாலை இடம்பெறவிருக்கின்ற நிலையிலேயே இந்த விடயம் கசிந்துள்ளது.
இதேவேளை, அவர்களின் புதல்வியான அனுஷியா சந்திரசேகரனுக்கு, முன்னணியில் முக்கிய பதவியொன்று வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்தத் தகவல் தெரிவித்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .