2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சின்னம் குறித்து மந்திராலோசனை

Niroshini   / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கருணா என்றழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனினால் உருவாக்கப்பட்டுள்ள ‘தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி’யின் சின்னம் குறித்து மந்திராலோசனையில் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகிறது.  

இதேவேளை, இந்தப் புதியகட்சியின் மத்தியகுழுக் கூட்டம், இந்தவாரம் கூடவுள்ளது என்றும், சுமார் ஒன்றரை மாதத்துக்குள் கட்சியைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு முன்னணி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

வடக்கு, கிழக்கை இணைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலேயே விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில், இந்தக் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு, மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள போக்கஸ் விடுதியில், சனிக்கிழமை (11) இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X