2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சுனாமி வந்தால் என்ன செய்வது? எச்சரிக்கை ஒத்திகை

George   / 2016 செப்டெம்பர் 01 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சுனாமி அனர்த்த எச்சரிக்கை தொடர்பான ஒத்திகையை, எதிர்வரும் 7ம் திகதி நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடாக, இந்த சுனாமி அனர்த்த எச்சரிக்கை ஒத்திகை நடத்தப்படவுள்ளது.  

14 மாவட்டங்களில் சுனாமி அனர்த்த எச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி, வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

சுனாமி ஏற்பட்டால் மக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்வது தொடர்பாக, இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளதோடு, 2004ஆம் ஆண்டு நாட்டை நிலைகுலைய வைத்த சுனாமிக்கு அனர்த்தத்துக்குப் பின்னர், இவ்வாறான பல ஒத்திகை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .