Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
6 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக இலங்கை தொழிலாளர் மீது இஸ்ரேல் சட்டத்தரணி வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
தாம் பணிபுரிந்த வீட்டிலுள்ள சிறுமியை பாலியல் ரீதியிலான துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
உதிஸ்ஸ பிரியங்கர (வயது 46) என்ற தொழிலாளர், ஜெருசலேம் நகரத்தில் தங்கியுள்ளார்.
அத்துடன், வீசாவில் குறிப்பிடப்பட்டுள்ள கால எல்லையைமீறி அங்குள்ள வீடொன்றில் சட்டவிரோதமான முறையில் சுத்திகரிப்பு தொழிலாளியாக பணிபுரிந்துள்ளார்.
சுமார் 3 வருடங்கள் குறித்த வீட்டில் பணிபுரிந்த உதிஸ்ஸ பிரியங்கர, கடந்த 11ஆம் திகதி சிறுமியின் தாய் உறங்கியபோது, அருகிலுள்ள அறையில் வைத்து சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
குறித்த சிறுமியுடன் கழிவறையை சுத்தம் செய்த சந்தேகநபர், சிறுமியிடம் பேசிக்கொண்டிருந்ததுடன் பின்னர் அறைக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
அவரிடமிருந்து தப்பித்த சிறுமி, சந்தேகநபரை தள்ளிவிட்டு வெளியில் சத்தமிட்டவாறு தாயிடம் ஓடிவந்ததாகவும் சந்தேகநபர் அப்போது தப்பிச் சென்றதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
27 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
4 hours ago