2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சிலிண்டர் விழுந்து பெண் காயம்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபுகஸ்கந்த வாயு உற்பத்தி நிலையத்துக்குச் சொந்தமான லொறியொன்று, ஒட்சிஜன் நிரப்பப்பட்ட சிலின்டர்களை ஏற்றிக்கொண்டு சபுகஸ்கந்தயிலிருந்து அம்பலாந்தோட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கையில் அதிலிருந்து சிலிண்டர் ஒன்று தவறி விழுந்ததில் பாதசாரிப் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

காயங்களுக்குள்ளான பெண், கொடகாவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர்  மேலதிக சிகிச்சைக்கென இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம், கொடகாவெல, பலவின்ன பகுதியில் நேற்று திங்கட்கிழமை (04) இடம்பெற்றதாகத் தெரிவித்த பொலிஸார், குறித்த பெண்ணின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதியைக் கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .