2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சுவிற்ஸர்லாந்துக்கு பிரதமர் பயணம்

Niroshini   / 2017 ஜனவரி 16 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை (17) முதல் 21 ஆம் திகதி வரையிலும் சுவிற்ஸர்லாந்தின் டாவோஸ் நகரத்தில் இடம்பெறவிருக்கின்ற உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சுவிற்ஸர்லாந்துக்கு, இன்று பயணமாகவுள்ளார்.

இந்த மாநாட்டில், 40க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னணி நாடுகளின் தலைவர்கள் மற்றும் சர்வதேச தொழில்முனைவோர் உள்ளிட்டோருடன் விசேட பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவுள்ளார்.   

இதேவேளை, இந்த மாநாட்டில் பங்கேற்பதற்கு, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, சர்வதேச மூலோபாயம் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ ஆகியோருக்கும் அழைப்பிதழ்கள் கிடைத்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .