2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சாவகச்சேரி விவகாரம்: பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணை

Menaka Mookandi   / 2016 மார்ச் 31 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தில் தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பிலான விசாரணைகள், பயங்கரவாத தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, பதில் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்கிரமசிங்க, மேற்படி பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில், பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .