2026 ஜனவரி 11, ஞாயிற்றுக்கிழமை

சிகரெட்டுகளுடன் உப-பொலிஸ் பரிசோதகர் கைது

Editorial   / 2026 ஜனவரி 11 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிற்கு வரியின்றி இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒரு உப பொலிஸ் பரிசோதகர்  கைது செய்யப்பட்டதாக கொழும்பு துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு துறைமுக நகர காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு உப பொலிஸ் பரிசோதகர்  ஆவார்.

சந்தேக நபர் 14,400 சிகரெட்டுகளுடன் பொலிஸ்  காவலில் எடுக்கப்பட்டார்.

 

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின்   உப பொலிஸ் பரிசோதகர்  சந்திமால் விக்ரமசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழு, துறைமுக நகர  பொலிஸ் நிலைய கட்டிடத்திற்கு அருகிலுள்ள ஓர் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளைக் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிகரெட்டுகளில் ஐந்து வகையான சிகரெட்டுகள் இருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்

சந்தேகத்திற்குரிய  உப பொலிஸ் பரிசோதகர்  2019 ஆம் ஆண்டு பொலிஸ் பணியில் சேர்ந்த 29 வயதுடைய நபர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .