2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘சஜித்துக்கு ஆதரவாக செயற்பட்டவர்களுக்கு பிரதியமைச்சு பதவியேனும் வழங்கப்படவில்லை’

Editorial   / 2019 ஜனவரி 20 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்த எந்தவொரு உறுப்பினருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதியமைச்சர் பதவியேனும் வழங்கவில்லையென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில், சஜித் மோதல்  இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் தீவிரமடைந்துள்ளதால், இது பொருளாதாரத்தையும் அதிகளவில் பாதிப்படையச் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

உடுகம்பொலயில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது ஜனாதிபதிக் கனவை நனவாக்கிக் கொள்ள பாரிய பிரயத்தனங்களைச் செய்து வருவதாகவும் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .