Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Nirosh / 2022 ஓகஸ்ட் 17 , மு.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாராளுமன்றத்தில் உள்ள பிரதானக் குழுக்களின் தலைவர் பதவிகளை, எதிர்க்கட்சி வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அறிய முடிகிறது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவிகளைப் பெறாது அரசாங்கத்தின் நல்ல வேலைத்திட்டங்களுக்கு எதிர்க்கட்சி ஒத்துழைப்புக்களை வழங்கும் எனவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சு பதவிகள் என்கிற எலும்புத் துண்டுகளைப் சுவைத்து நாட்டு மக்களுக்கு மேலும் சுமையை அதிகரிப்பதை நாம் முழுமையாக எதிர்க்கிறோம் எனவும், நாட்டு மக்களின் குரல்கள் எமக்குக் கேட்கும். அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பது எமக்கு தெரியும். எனவே நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கான வேலைத்திட்டங்களையே நாம் முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தார்.
நாடு நெருக்கடி நிலைமைகளுக்கு முகங்கொடுத்து வரும் இந்நிலையில் நாட்டு மக்களோடு கரங்கோர்ப்பதற்கு எமக்கு அமைச்சுப் பதவிகள் அவசியமில்லை. குறிப்பாக எதிர்க்கட்சிகளுக்குப் பாராளுமன்றத்தில் உள்ள குழுக்களின் தலைவர் பதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக அறிய முடிகிறது. அதனை அரசாங்கம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் தலைமைப் பதவிகளும் எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.
3 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
9 hours ago