Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 மார்ச் 03 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரயில் போக்குவரத்து பாதையில் தண்டவாளத்திலும் தண்டவாளங்களுக்கு அருகிலும் பாதுகாப்பற்ற முறையில் பயணஞ்செய்யும் பொதுமக்கள் தொடர்பில், தற்பொழுது நடைமுறையில் இருந்துவரும் சட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்போவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பற்ற முறையில் ரயில் மார்க்கத்தில் பயணிப்பதன் காரணமாக, நாளொன்றுக்கு 2 முதல் 3 பேர் வரையில் மரணிப்பதாகத் தெரிவித்துள்ள திணைக்களம், கடந்த இரு மாதங்களில் மாத்திரம் 64 பேர் மரணித்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.
எனவே இந்நிலைமையை கட்டுபடுத்தும் நோக்கில், ரயில் மார்க்கத்தில் பயணிக்கும் பயணிகள் மீதான சட்டத்தை மேலும் பலப்படுத்தி, விபத்துகளை கட்டுபடுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி, அநுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .