2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

’சத்தத்தை வைத்து வாக்கெடுப்பு நடத்த முடியாது’

Editorial   / 2018 நவம்பர் 15 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சத்தத்தை வைத்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த முடியாதென, மஹிந்த ராஜபக்ஸ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தான் புதிய பிரதமராகப் பதவியேற்றதும், நாடு முழுவதும் பல புதிய எதிர்பார்ப்புகள் தோன்றியது.

ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் ஒரு வருடம் நாட்டை ஆட்சி செய்திருந்தால் நாட்டின் நிலை மோசமாகியிருக்குமென பிரதமர் மஹிந்த இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையை ஆற்றும் போதே மஹிந்த இதனைத் தெரிவித்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை ஐக்கிய தேசியக் கட்சி 21 பில்லியன் ​அ​மெரிக்க டொலர்களை கடன் வாங்கியுள்ளதென்றார்.

கடந்த அரசாங்கம் அதிகரித்த எரிபொருள்   விலையை இன்றிரவே குறைப்போம் என்றார்.

சுயாதீனமாக நியமிக்கப்பட்ட சபாநாயகர் கட்சி சார்பின்றி சுயாதீனமாக நடந்துக்கொள்ள வேண்டுமெனவும்  மஹிந்த ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .