2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

’சந்திரிகா இப்போது செல்லாக்காசு’

Editorial   / 2019 ஜனவரி 21 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எவரும், இனியொரு போதும், அரசாங்கத்தோடு இணைய மாட்டர்களெனத் தெரிவித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன, தற்போது செல்லாக் காசாகியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்வை, ஐக்கிய தேசியக் கட்சியினர், ஒருபோதும் இணைத்துக்கொள்ள மாட்டார்களென்றும் கூறினார்.

அநுராதபுரத்தில் இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், அமைச்சரவை தற்போது பூர்த்தியாகியுள்ள நிலையில், எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும், இனி, அரசாங்கத்தோடு இணையப் போவதில்லை என்றும் அமைச்சுப் பதவியொன்று கிடைக்காமல், எவரும் அரசாங்கத்தோடு இணைத் தயாரில்லை என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .