2025 ஒக்டோபர் 13, திங்கட்கிழமை

சீனா சென்றடைந்தார் பி​ரதமர் ஹரிணி

Editorial   / 2025 ஒக்டோபர் 12 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஞாயிற்றுக்கிழமை (12) பிற்பகல் சீனாவை சென்றடைந்தார்.  சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில் சீனாவுக்கு சென்றுள்ள பிரதமர்,  எதிர்வரும்15 ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருப்பார்.

தனது விஜயத்தின் போது, ​​பிரதமர் ஹரிணி அமரசூரிய, சீன அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து பெய்ஜிங்கில் "ஒரு எதிர்காலம்: பெண்களுக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட வளர்ச்சி" என்ற தலைப்பில் ஏற்பாடு செய்துள்ள பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ​​பிரதமர் சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும்   பிரதமர் லி கெகியாங் ஆகியோருடன் பல இருதரப்பு கலந்துரையாடல்களிலும் பங்கேற்பார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X