Editorial / 2021 மே 28 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.
அதனையடுத்து பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி அலுவலகம் மூடப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளர் உள்ளிட்ட பணியாளர்கள் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், பாராளுமன்ற அமர்வுகளில் எத்தனை உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். அவர்களின் நிலைமைகள் என்ன? என்பது குறித்த கேள்விகள் எழும்பியிருந்தன.
அந்த வகையில், மே மாதம் 18, 19 மற்றும் 20ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் பங்கேற்றிருந்த உறுப்பினர்கள் தொடர்பில் புள்ளிவிவரங்களை பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் அறிவித்திருந்தது.
அந்த வகையில்,
மே 18ஆம் திகதி 202 பாராளுமன்ற உறுப்பினர்களும் (90%),
மே 19ஆம் திகதி 198 உறுப்பினர்களும் (88%),
மே 20ஆம் திகதி 216 பாராளுமன்ற உறுப்பினர்களும் (96%) அமர்வுகளில் பங்கேற்றிருந்தனர்.
19 minute ago
27 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
27 minute ago
38 minute ago