2025 ஜூலை 09, புதன்கிழமை

சமன் எம்.பிக்கு தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரம்

Editorial   / 2020 பெப்ரவரி 14 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய நாடாளுமன்ற உறுப்பினராக அண்மையில் பதவிபிரமாணம் செய்துக்கொண்ட சமன் ரத்னப்ரியவுக்கு இறக்குமதி தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமன் ரத்னப்ரியவின் வாகன அனுமதிப்பத்திரத்துக்கான அனுமதியைக் கோரிய ஆவணங்கள் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதென, அரச முகாமைத்துவ அமைச்சின் நாடாளுமன்ற அலுவல்கள் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இ​தேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்ரியவுக்கு வழங்கப்படவுள்ள வாகன அனுமதிப்பத்திரம் 65,000 அமெரிக்க டொலர்கள் (10 மில்லியன் ரூபாய்) பெறுமதி என்றும்  தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன ஜனவரி மாதம் 23ஆம் திகதி பதவி விலகியதையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரான சமன் ரத்னப்ரிய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .