2025 மே 22, வியாழக்கிழமை

சமர்ப்பிக்கவுள்ள முன்மொழிவில் இரண்டும் இல்லை

Gavitha   / 2016 ஜனவரி 04 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பியூமி பொன்சேகா

எதிர்வரும் 9ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள முன்மொழிவுகளில்;, ஒற்றையாட்சி மற்றும் பௌத்தத்துக்கு முதலிடம் ஆகிய முக்கிய விடயங்களை அரசாங்கம் தவிர்த்துவிட்டது என மக்கள் ஐக்கிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான தினேஷ் குணவர்;தன குற்றஞ்சாட்டினார்.

1978ஆவது அரசியலமைப்பில், ஒற்றையாட்சி மற்றும் பௌத்தத்துக்கு முக்கிய இடம் வழங்கல் ஆகியன காணப்பட்டதாக அவர் கூறினார்.

நாட்டைப் பிரதானமாக பாதிக்கும் இந்த இரண்டு விடயங்களையும் தவிர்ப்பது தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்தப்படவில்லை என ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறினார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குதல், விகிதாசார பிரதிநிதித்துவத்துக்கு பதிலாக தனியாள் பெற்ற வாக்கின் அடிப்படையில் தெரிவு எனும் இரண்டு பிரபல முன்மொழிவுகளுக்கு மட்டுமே கருத்துக் கணிப்பினூடாக மக்களின் அங்கிகாரம் பெற அரசாங்கம் விளைகின்றது என அவர் குற்றஞ்சாட்டினார்.

தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் முன்மொழிவுகளின் விளைவாகவே இந்த மாற்றங்கள் ஏற்பட்டன என தான் சந்தேகிப்பதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X