2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

சர்வஜன வாக்கெடுப்புக்கு கூட்டமைப்பு பச்சைக்கொடி

Niroshini   / 2017 பெப்ரவரி 13 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அ​ரசியலமைப்புக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமாயின் அதனை ஆதரிப்பதாக, ​தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. 

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு ஏற்பட்ட கதி, புதிய அ​ரசியலமைப்புக்கும் ஏற்படக் கூடாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.புதிய அ​ரசியலமைப்பை சிங்கள மக்கள் தம்மீது திணிக்கப்பட்டதாக பார்க்கக் கூடாதென அவர் கூறினார்.  

ஐ.நாவின் முன்னாள் பொது செயலாளர் பான் கீ மூன், இலங்கைக்கு வந்தப்போது “சிங்கள மக்கள், தமிழ் மக்களுக்கு நீதி வழங்காதுவிடின் தமிழ் மக்கள் தம்மை ஆளப்பட முடியாதவர்களாக ஆக்கிக்கொள்வர்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் கூறினார் என சுமந்திரன் எம்.பி இதன்போது ஞாபகப்படுத்தினார்.  

“நாம் மீண்டும் வன்முறைக்கு போக மாட்டோம், நாம் மீண்டும் ஆயுதம் தூக்க மாட்டோம் ஆனால், நாம் எம்மை ஆளப்பட முடியாதவர்கள் ஆக்குவோம் என அவர் கூறினார் ” என்றும் சுமந்திரன் இதன்போது கூறினார்.  

​ஆயினும், சம்மந்தன் கூறியதை பயன்படுத்தி புதிய அரசியலமைப்பை, வரைவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளார்ந்த விருப்பத்தை கேள்விக்கு உட்படுத்தக் கூடாதென சுமந்திரன் கூறினார்.  தமிழ் மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும், தமிழர் பிரச்சினையை தீர்க்க எடுக்கும் முயற்சி முன்னகர அனுமதிக்க வேண்டும் அது தோல்வியடைந்தால் மட்டுமே அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆராய வேண்டுமென சுமந்திரன் கூறினார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X