Editorial / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரியவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கினை நவம்பர் 25ஆம் திகதிவரை ஒத்திவைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (26) தீர்மானித்துள்ளது.
மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அசல வெங்கப்புலி, இதற்கான உத்தரவை இன்று பிறப்பித்தார்.
பேராசிரியர் சரத் விஜேசூரிய மீதான குற்றப்பத்திரம் தொடர்பில் அடிப்படை எதிர்ப்பு மனுவினை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, மன்றில் தெரிவித்தார்.
இதனையடுத்து, அடிப்படை எதிர்ப்பு மனுவினை செப்டெம்பர் 21ஆம் திகதிக்கு முன்பாக தாக்கல் செய்யுமாறு தெரிவித்த நீதிபதி, அதற்கு கால அவகாசம் வழங்கும் வகையில் வழக்கு நடவடிக்கைகளை ஒத்திவைத்துள்ளார்.
30 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2026