Editorial / 2021 ஜூன் 11 , பி.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மைக்காலமாக இந்தியப் பிரதமரான நரேந்திர மோடி நீண்ட தாடியுடன் தோற்றமளித்து வருகின்றார்.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் பாராமதி பகுதியைச் சேர்ந்த தேநீர் கடை உரிமையாளரான ‘அணில் மோர்‘ என்பவர் இந்தியப் பிரதமர் மோடிக்கு மணி ஓர்டர் மூலம் 100 ரூபாய் பணத்தையும் ஒரு கடிதத்தையும் அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் பிரதமர் மோடியை அவரது தாடியைச் சவரம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், பிரதமரை அவமதிக்கும் நோக்கத்தில் இதைச் செய்யவில்லை என்றும், கொரோனா நேரத்தில் மக்கள் சந்தித்துவரும் நெருக்கடிகளை பிரதமர் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே பிரதமரின் கவனத்தை ஈர்ப்பதற்கு இப்படி செய்தேன் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், “பிரதமர் ஏதாவது அதிகரிக்க வேண்டும் என்றால், அது இந்த நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பாக இருக்க வேண்டும். மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தற்போதுள்ள மருத்துவ வசதிகளை அதிகரிக்க முயற்சிகள் செய்ய வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

16 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
3 hours ago