Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 12 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.கமல்
நடப்பாண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் (பாதீட்டில்) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்படுவதை வரவேற்கும், காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம், உறவுகள் காணாமல் போனமைக்கான சான்றிதழ் பெற்றவர்களுக்கு மாத்திரமே இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
குறித்த அலுவலகம் நேற்று (11) விடுத்திருந்த ஊடக அறிக்கையில், அரசாங்கம் தனது பாதீட்டில் ஆயுதப்படை, பொலிஸார் உள்ளடங்களாக காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு உதவ 500 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளதை வரவேற்பதாகவும், குறித்த பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படும் வரையில் உறவுகள் காணாமல் போனமைக்கான சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு மாத்திரமே இடைக்காலக் கொடுப்பனவு 6,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
அத்தோடு, மேற்படி நிதி ஒதுக்கீட்டை காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் வரவேற்பதாகவும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஆயிரக்கணக்கிலான உறவினர்களுக்கு இந்த நிவாரணம் சென்றடைவது குறித்து அவதானத்துடன் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
மேற்படி விடயம் குறித்து அவதானம் செலுத்தி, காணாமல் போனவர்கள் குறித்த சான்றிதழ்களைத் தயாரித்து வருவதாகவும், அவற்றை பெற்றுக்கொள்வதில் உள்ள சவால்களைக் கலைந்து, காணாமல் போன உறவுகளுக்கு உதவத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
குறித்த அலுவலகத்தின் பரிந்துரைகளை ஏற்றே வரவு- செலவுத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதென்றும், என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா கடன் உதவி திட்டங்களின் போது காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவ்வலுவலகம் அறிவித்துள்ளது.
காணாமல் போனவர்களின் குடும்பங்களில் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த நிவாரண்ஙகள் வழங்கப்படவுள்ளதாகவும், இடைக்கால நிவாரணங்களை ஏற்றுக்கொள்வதோடு, தமக்குரிய நீதித் தீர்வுகள் கிடைக்கும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, காணாமற்போன ஆட்கள் சார்பாக, எந்தவொரு மரணச் சான்றிதழும் வழங்கப்படவில்லையென, உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சு, நாடாளுமன்றத்தில் கடந்த 21ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
11 minute ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago
5 hours ago