2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சான்றிதழைக் கோரும் ஐ.எம்.எப்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 20 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்றின் இலங்கைக்கான விஜயத்தின் போது கடனாளிகளிடமிருந்து போதிய உத்தரவாதத்தை எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கை முகங்கொடுக்கும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவிப் பொதியை அறிமுகப்படுத்துவதற்கான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்கள் ஒகஸ்ட் மாதம் 24 முதல் 31 வரை இலங்கைக்கு விஜயம் செய்வார்கள் என ரொய்டர்ஸ் செய்தித் சேவை தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் வசதிகளை வழங்குவதற்கு, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடன் வழங்குநரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழ் அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .