2026 மே 04, திங்கட்கிழமை

சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

J.A. George   / 2021 மார்ச் 29 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவர்களை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அழைத்து செல்லாத சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை கூறியுள்ளார்.

இன்றைய தினம் மேல் மாகாணத்தில் உள்ள சகல தர மாணவர்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முகக்கவசங்கள் அணியாமல் வாகனங்களில் பயணிப்பதற்கு இடமளிக்க கூடாது என்றும் இந்த விடயம் தொடர்பில் சகல பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாணவர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அவர்கள் பயணிக்கும் வாகனங்களின் சாரதி, நடத்துனர் அல்லது உரிமையாளருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .