Editorial / 2019 ஜூலை 26 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி உயிரிழப்பதற்கு காரணமான வாகன விபத்தை ஏற்படுத்திய சாரதிக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நவிந்து உமேஷ் ரத்நாயக்க என்பவருக்கு எதிராகவே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர், குற்றப்பத்திரிகை ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி கொழும்பு, பொரளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி ஆனந்த சாகர சரத் சந்திர, பயணித்த மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு டிப்பெண்டர் ரக வாகனத்தில் பயணித்தவர்கள் தப்பிச் சென்றிருந்தனர்.
இந்த விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் மகன் உள்ளிட்ட 8பேர் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அத்துடன், டிபென்டர் வாகனத்தை செலுத்திய பொலிஸ் அதிகாரியின மகனான நவீது ஒமேஸ் ரத்னாயக்க என்பவர் விளக்கமறியலின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
13 Mar 2026
13 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
13 Mar 2026
13 Mar 2026