Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2021 பெப்ரவரி 05 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ எம் கீத்
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவனி சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல என, பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ.சுமேந்திரன் தெரிவித்தார்.
திருகோணமலை சிவன் கோவில் முன்றலில் இருந்து, இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவணியில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரெத்த அவர், இந்த அரசாங்கத்தின் சிறுபான்மை மக்களுக்கான எதிரான நடவடிக்கையை கண்டித்தும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்குமே, இந்தப் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான நடைபவனி நடைபெருகின்றது எனவும் அது சிங்கள மக்களுக்கு எதிரானதாக இல்லை என்றார்.
பத்து கோரிக்கைகளை முன்வைத்து இந்த பவனி நடைபெறுவதாகத் தெரிவித்த அவர், வடகிழக்கின் தெற்கு முனையில் இருந்து வடமுனையை நோக்கிய நிலையில் பயணம் தொடர்கின்றது எனவும் கூறினார்.
இந்த நடைபவனியை நிறுத்துவதற்கு அரசாங்கம் பலமுனைகளிலும் முயற்சித்ததாகத் தெரிவித்த சுமந்திரன், எனினும், பொத்துவில் முதல் திருகோணமலை வரைக்கும் வரமுடிந்துள்ளது எனவும் கூறினார்.
"இந்நாட்டில், சிங்கள பௌத்த மக்களுக்கு இருக்கும் சகல உரிமைகளும் தமிழ் பேசும் மக்களாகிய எங்களுக்கும் உண்டு ஏனெனில் நாங்களும் இந்நாட்டின் குடிமக்கள் என்றாலும் நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுதந்திரதின நிகழ்வில் பேசும்போது, நான் சிங்கள பௌத்தன் என்று தெரிவித்தார். எனினும், அது எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆயினும் இந்நாட்டின் ஜனாதிபதி நான் சிங்கள மக்களுக்கும் மாத்திரம் சேவையாற்றுவேன் என்று தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
"எங்களுக்கும் இந்நாடு சொந்தமானது. நாங்களும் வசிக்கின்றோம். அதோபோல், சிங்கள மக்களும் இந்நாட்டில் வசிப்பதற்கான உரிமை உள்ளது. எங்களின் உரிமைகளை அகற்றமுடியாது. இதன் அடிப்படையில், நாங்கள் இந்த நடைபவனியை மேற்கொள்கின்றோம்" எனவும் சுமந்திரன் கூறினார்.
இன்று, இந்தப் பேரணிக்கு எந்த எதிர்ப்புத்தன்மையையும் அவர்கள் காட்டவில்ல. எனத் தெரிவித்த அவர், தனக்கு எதிராகவும் சில பிரதேச நீதிமன்றங்களில் தடை உத்தரவு பெறப்பட்டதாக அறிந்த்தாகவும் ஆனால், தனது கைகளில் அது கிடைக்கப்பெறவில்லை எனவும் கூறினார்.
அரசாங்கம் எவ்வழிகளிலும் முயற்சித்தாலும் தனது நடைபவனி தொடரும் என, சுமந்திரன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago