2025 மே 14, புதன்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்;பெரியப்பா கைது

Simrith   / 2023 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டில் வறுமை காரணமாக பெரிய தந்தையின் வீட்டில் தமது பிள்ளையை தங்க வைத்த நிலையில் பெரிய தந்தை மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி உள்ளதாக, ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். 

வறுமை காரணமாக 17 வயதான தமது மகளை, தந்தையின் அண்ணா  வீட்டில் பெற்றோர் தங்க வைத்துள்ளனர். 

இந்நிலையில் சிறுமியின் பெரிய தந்தை நீண்ட காலமாக சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதையடுத்து, சனிக்கிழமை பெற்றோரால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. 

முறைப்பாட்டின் அடிப்படையில்  விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , சிறுமியின் பெரிய தந்தையை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .