Editorial / 2025 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
12 வயதும் 11 மாதங்களேயான ஒரு சிறுமி கடுமையான பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மொனராகலை, கோணக்கங்ஹார பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜயமஹா பிரதேசத்தில் வசிக்கும் சிறுமியே இவ்வாறு கடுமையான பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சிறுமியை கடுமையான பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துவதற்கு உறுதுணையாக இருந்து ஆதரவு வழங்கியது மற்றும் குற்றத்தை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ், அந்த சிறுமியின் பாட்டியை (வயது 81) கோணக்கங்ஹார பொலிஸார், செவ்வாய்க்கிழமை (26) கைது செய்தனர்.
சிறுமியின் தாய் வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். அந்த சிறுமி, தனது தாயின் இரண்டாவது கணவர் மற்றும் பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார்.
தாயின் இரண்டாவது கணவர், ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி மதுபானத்தை அருந்தியுள்ளார். அப்போது வீட்டில் பாட்டி இல்லை. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, வீட்டுக்குள் ஓர் அறைக்குள் சிறுமியை இழுத்துச் சென்று, கடுமையாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
பொலிஸாருக்கு செவ்வாய்க்கிழமை (26) இரவு 7.30 மணிக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அன்றிரவே பாட்டியின் வீட்டுக்கு விரைந்த பொலிஸார், 81 வயதான பாட்டியை கைது செய்துள்ளார்.
இதேவேளை, அந்த சிறுமியின் சித்தப்பாவும் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்த பொலிஸார், இருவரையும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.
குறிப்பு: இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள படத்துக்கும் செய்திக்கும் எந்தவிதத்திலும் தொடர்பு இல்லை. இந்தப் படம் இணையத்தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டது என்பதை அறியத்தருகின்றோம்.
45 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago
4 hours ago