2025 ஜூலை 25, வெள்ளிக்கிழமை

சிறுமியை ITEM என அழைத்தவருக்கு சிறை

Editorial   / 2022 ஒக்டோபர் 27 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

16 வயதான சிறுமியை ITEM என அழைத்த நபருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

16 வயது சிறுமி ஒருவர் பாடசாலையில் இருந்து திரும்பி 2015 ஆம் ஆண்டு ஜூலை 14ஆம் திகதி மதியம் 2.15 மணியளவில்  வந்துகொண்டிருந்த போது,  அங்கு அமர்ந்திருந்த 25 வயது தொழிலதிபர் அந்த சிறுமியின் பின்னால் சென்று சிறுமியின் தலை முடியை இழுத்து தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். அந்த சிறுமியை ITEM எனவும் கூறியுள்ளார்.  

சம்பவம் குறித்து சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மும்பை போக்சோ நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வழக்கு தொடர்ந்தார். இதற்கு தீர்ப்பு வழங்கிய மும்பை போக்சோ நீதிமன்ற சிறப்பு நீதிபதி எஸ்.ஜெ.அன்சாரி, சிறுமியை ஐட்டம் (ITEM) என அழைத்த தொழிலதிபருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X