2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சிறையில் சஜித்

Freelancer   / 2022 செப்டெம்பர் 12 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காலி முகத்திடல் போராட்டத்தின் செயற்பாட்டாளர்   தமிதா அபேரத்னவை காண எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (12) காலை மெகசின் சிறைச்சாலைக்குச் சென்றார்.

சிறையிலிருந்து வெளியே வந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,

பொது மக்களின் போராட்டத்தை முன்னெடுத்த தமிதா அபேரத்ன போன்றவர்களை தற்போதைய அரசாங்கம் வேட்டையாடுவதை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்று இளைஞர்கள் வேட்டையாடப்படுகிறார்கள், போராட்டத் தலைவர்கள் வேட்டையாடப்படுகிறார்கள், சிவில் சமூகம் வேட்டையாடப்படுகிறது. இது ஜனநாயக நாட்டில் நடக்கக் கூடாது.

குறிப்பாக தமிதா அபேரத்னவின் விரைவான விடுதலையை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். இந்த வேட்டையை நிறுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்குப் பதிலாக அவர்களைப் பாதுகாக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .