2025 ஜூலை 09, புதன்கிழமை

சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் நாயகம்

Editorial   / 2019 ஜனவரி 17 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஜனாதிபதி மேலதிக செயலாளர் ( நிலையான அபிவிருத்தி) சந்ரரத்ன பல்லேகம ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தொடக்கம் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்த சந்ரரத்ன பல்லேகம சிவில் பாதுகாப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டிருந்ததுடன், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராகவும் கடமையாற்றியிருந்தார்.

அத்துடன் 2013- 2015ஆம் ஆண்டு வரை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாகவும் பதவி வகித்திருந்தார்.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சந்ரரத்ன பல்லேகம இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .