2025 ஜூலை 09, புதன்கிழமை

’சுய கட்டுப்பாடு கருத்தை ஜனாதிபதி ஆதரிப்பார்’

Editorial   / 2020 பெப்ரவரி 14 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் சுய கட்டுப்பாடு என்ற கருத்தை ஜனாதிபதி ஆதரிப்பார் என்று எதிர்பார்ப்பதாக, வான் இ ஃப்ரா நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி வின்சென்ட் பெரீன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில், “இலங்கை குடிமக்களிடமிருந்தான பெரும் ஆணையுடன் இலங்கையின் ஜனாதிபதியாக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு உங்களை நாங்கள் வாழ்த்துகிறோம்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்திரிகைகள்,  பிற ஊடக தலைவர்களுடன் நீங்கள் நடாத்திய பல சந்திப்புக்களால், ஊடகங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனவும் அவர்களுக்கு உண்மையை எழுத சுதந்திரம் இருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு நீங்கள் அளித்த உறுதிமொழிகளை தாங்கள் ஆர்வத்துடன் அவதானித்துள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

3,000க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்களை சர்வதேச உறுப்பினர்களாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய பத்திரிகைகள் அமைப்பான தாம், இலங்கை அரசமைப்பின் பிரிவு 14(1)(அ)இல் கூறப்பட்டுள்ள 'வெளியீடுகள் உள்ளடங்கலாக ஒவ்வொரு பிரஜைக்கும் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் வழங்கப்படும்' என்பதற்கமைய ஊடக சுதந்திரத்தினை உறுதியளிக்கும் வகையில் வெளியிட்ட உங்கள் அறிக்கைகளை தாங்கள் வரவேற்கின்றோமெனவும்,  அவர் குறிப்பிட்டுள்ளார்.

“வெளியீட்டாளர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களை சிறையிலிடும் பத்திரிகை பேரவைச் சட்டம் போன்ற சட்டங்களை விட சுதந்திர உலகில், ஜனநாயக அரசாங்கங்கள் சுய கட்டுப்பாட்டுக் கொள்கைகளின் அடிப்படையில் பத்திரிகைகளை ஒழுங்குமுறைப்படுத்த அவ் அரசாங்கங்கள் அனுமதித்துள்ளன என்பதனை நாம் இவ்விடத்தில் குறிப்பிடக்கூடியதாக உள்ளது” என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .