2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சோறு சிக்கி சிசு மரணம்

Editorial   / 2019 பெப்ரவரி 28 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தொண்டைக் குழியில் சோறு சிக்கியதன் காரணமாக, ஒரு வயது 9 மாதங்களேயான சரத்குமார் நீஷான் எனும் ஆண் சிசுவொன்று மரணித்த சம்பவமொன்று, ஏறாவூர் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் கீழ்வரும் பாலையடித்தோணா கிராமத்தைச் சேர்ந்த சிசுவே, நேற்று முன்தினம் (26) மாலை இவ்வாறு மரணித்துள்ளது.

வழமை போன்று உணவு உட்கொண்டிருந்த அந்தச் சிசுவுக்கு விக்கல் ஏற்பட்டதையடுத்து, அவஸ்தையுற்றுள்ளது. எனினும், சற்று நேரத்தில் அச்சிசு அசைவற்று இருந்துள்ளது.

தங்களுடைய சிசுவுக்கு ஏதோ, விபரீதம் ஏற்பட்டுள்ளதென்பதை உணர்ந்து கொண்ட பெற்றோர், சிசுவை, சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். எனினும், அச்சிசுவைப் பரிசோதித்த வைத்தியர்கள், சிசு ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

எனினும், இந்தச் சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .