2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஜோன்ஸ்டன் எம்.பிக்கு எதிராக அதிகுற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல்

Thipaan   / 2016 மார்ச் 28 , பி.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக, அதிகுற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குருநாகல் பிரதேசத்தில் உள்ள சதொச வர்த்தக நிலையத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்துவிட்டு    அதற்கான பணத்தை செலுத்தவில்லை என்று, அவருடன் சேர்த்து மூவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இந்த மூவருக்கு எதிரான வழக்கு, குருநாகல் மேல் நீதிமன்றத்தில் நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே, அதிக்குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர், குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி சுனந்த குமார ரத்னாயக்க, பிரதிவாதிகள் மூவரும் முன்வைப்பு ரொக்கப்பிணையின் ஊடாகவும் ஒரு பிரதிவாதியை  10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .