2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

ஜனாதிபதி கூறவில்லை: பிரதமர்

Princiya Dixci   / 2017 ஜனவரி 22 , பி.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை, இல்லாதொழிக்க மாட்டேன் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிவில்லை” என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  

சுவிற்ஸலாந்தின் டாவோஸ் நகரத்தில் இடம்பெற்ற உலக பொருளாதார மாநாட்டுக்குச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

இந்த மாநாடு, கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகி, 21ஆம் திகதி நிறைவடைந்து. 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை, இல்லாதொழிக்கப்படாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே அறிவித்துள்ளது, ஜனாதிபதி அல்லர் என்றும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.  

இந்த விவகாரம் தொடர்பில் பிரதான கட்சிகள் யாவும், கலந்துரையாடியுள்ளன. மிகவிரைவில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் தீர்மானமொன்று எட்டப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.  

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்படவுள்ள வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் கருத்துரைத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நியூசிலாந்தும் இலங்கையும் இணைந்து பிரித்தானியாவுக்குள் மிக அண்மித்ததான வர்த்தகத் தொடர்புகளைக் கட்டியெழுப்புவது தொடர்பிலும் கருத்துரைத்துள்ளார்.  

கடந்த அரசாங்கத்தின் போது, இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதிமோசடிகள் தொடர்பில், இதுவரையிலும் ஏன் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று, வெளிநாட்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,  

“ஊழல் தொடர்பில் தேடியறிவதற்கு, திறமைவாய்ந்த அதிகாரிகள் தேவை. அதற்காக, அதிகாரிகளுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் இந்தியாவில் போதியளவான பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .