2025 மே 22, வியாழக்கிழமை

ஜனாதிபதி ஆணைகுழுக்களுக்கு ரூ.5301 இலட்சம் செலவு

Freelancer   / 2025 பெப்ரவரி 28 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

முந்தைய அரசாங்கங்களால் நியமிக்கப்பட்ட பதினான்கு ஜனாதிபதி ஆணைக்குழுக்களுக்கு 530 மில்லியன் ரூபாய்க்கும் (530.1 மில்லியன்) அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இருப்பினும், கடந்த கால போராட்டத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிறரின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை விசாரித்த ஜனாதிபதி ஆணையத்தின் அறிக்கை மட்டுமே இந்த 14 ஆணையங்களின் பரிந்துரைகளை செயல்படுத்தியுள்ளது என்றும், அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், 2024ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதிகளின் பராமரிப்புக்காக மட்டும் ரூ.110 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டதாகவும், ரணில் விக்ரமசிங்க மற்றும் கோட்டபய ராஜபக்ஷ காலத்தில் ஆறு ஆளும் கட்சி அமைப்பாளர்களுக்காக ரூ.370 மில்லியனுக்கும் அதிகமாக செலவிடப்பட்டதாகவும், ஜெயதிஸ்ஸ கூறினார்.AN




 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X