2025 ஜூலை 09, புதன்கிழமை

ஜனாதிபதி- பிரதமருக்கிடையில் சந்திப்பு

Editorial   / 2018 நவம்பர் 12 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கிடையில் இன்று பகல் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இச்சந்திப்பின் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் ஜனாதிபதி மற்றும்  பிரதமரைச் சந்திக்கவுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது, எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இதில் போட்டியிடும் கட்சி மற்றும் இலக்கங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்படுமென கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஜனாதிபதி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உ றுப்பினர்களுக்கிடையில் நேற்றிரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாகவும், இதன்போது தேர்தல் குறித்தும் அதற்கு முகங்கொடுக்க வேண்டிய முறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .