2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஜனாதிபதி ரணில் தொடர்பில் எகிப்து நம்பிக்கை

R.Maheshwary   / 2022 ஓகஸ்ட் 08 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையை முன்னேற்றம் மற்றும் சுபீட்சத்திற்கு இட்டுச் செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆற்றலில் எகிப்து அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என எகிப்து ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் தனது  வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அவர்,இலங்கை மக்களின் எதிர்ப்பார்ப்பு, நம்பிக்கையை நிறைவேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் சகல விடயங்களும் வெற்றியளிக்க வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளின் பொதுவான நலன்களை முன்னெடுத்துச் செல்வதற்கும் மேலும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கும் இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆர்வமாக இருப்பதாக எகிப்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X