2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

'ஜனாதிபதியை கொலைச் செய்யும் சூழ்ச்சியில் எனது பெயரில்லை'

Editorial   / 2018 டிசெம்பர் 21 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறப்புரிமைகளை மீறுகின்றார் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான சரத் பொன்சேகா, ஜனாதிபதியை கொலைச் செய்வதற்கான சூழ்ச்சியில் தன்னுடைய பெயர் இல்லையென்பது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (சி.ஐ.டி) அறிக்கையிலிருந்து தெளிவாகியுள்ளது என்றார். 

நாடாளுமன்றத்தில் ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய அவர், கொலைச்சூழ்ச்சி தொடர்பில் அறிக்கையிடும் போது, மிகவும் கவனமாக அறிக்கையிடவேண்டுமென, ஊடகங்களுக்கு அறிவுறுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

ஜனாதிபதியை படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சியில் சரத் பொன்சேகா தொடர்பில்லை. அவ்வாறான முறைப்பாடுகளும் இல்லை. விசாரணைகளில் அம்பலமாகவும் இல்லை என, குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் (சி.ஐ.டி) பொலிஸ் மா அதிபரும், சபாநாயகருக்கு அறிவித்துள்ளனர்.இவ்வாறான நிலையிலேயே, நாமல் குமார என்பவர், தன்மீது போலியான குற்றச்சாட்டை முன்வைத்துகொண்டிருக்கின்றார் என்றார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .