2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஜல்லிக்கட்டு விவகாரம்: நீதிமன்றம் கைவிரிப்பு

George   / 2017 ஜனவரி 12 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க இயலாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் கைவிரித்துவிட்டது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது நடத்தும் வகையில்  ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால அனுமதி கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இடைக்கால அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உத்தரவிட்டனர்.

மேலும், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உடனடியாக தீர்ப்பளிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு குறித்து தீர்ப்பு எழுதப்பட்டு வருவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .