Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Janu / 2025 மார்ச் 26 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இடையிலான சந்திப்பு, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றிருந்தது.
இதன்போது பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் K.V. சமந்த வித்தியாரத்ன , அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திர கீர்த்தி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இச் சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலைமைகள் மற்றும் பெருந்தோட்ட பயிர்கள் உற்பத்தி, அதன் ஏற்றுமதி, போன்றவற்றின் நிலைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
மலையக மக்களின் காணி உரிமை, வீட்டு திட்டம் பயனாளிகள் தெரிவு முறை தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை தொடர்பாகவும் கலந்துரையாடியதுடன் தற்போது அரசு வரிய மாணவர்களுக்கான சத்துணவு வழங்குவது தொடர்பாகவும், தொடர்ச்சியாக அமெரிக்க அரசு இலங்கைக்கு உதவிகள் வழங்குவது சம்பந்தமாக நினைவு கூர்ந்ததுடன் மலையக மக்களுக்கான உதவிகள் , அவர்களுக்கான சேவைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
தற்போது இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மகிழ்ச்சியையும் திருப்தியும் தருவதாக அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மேலும் தெரிவித்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
12 May 2025