2026 மே 04, திங்கட்கிழமை

ஜெனீவா தீர்மானத்தின் பின்னர் ’ பழிவாங்கல் முன்னெடுப்பு’

R.Maheshwary   / 2021 மார்ச் 31 , மு.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

     இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானத்துக்குப் பின்னரான அரசாங்கத்தின் செயற்பாடுகள், தமிழ் மக்களைப் பழிவாங்குவது போன்றே அமைந்துள்ளது என, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

அத்தோடு, ஜெனிவா தீர்மானம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் முன்வைத்துள்ள கருத்துகள் ஏற்புடையவையல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், “ஜெனீவாத் தீர்மானத்தை அரசாங்கம் நேரடியாகவே எதிர்க்கும நிலையில், தமிழர் தரப்பிலிருந்தும் ஒருமித்த நிலைப்பாடுகள் இல்லாமல் மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டு வந்தனர்” என்றார்.

குறிப்பாக, சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் போன்றவர்கள் முன்னுக்குப் பின் முரண்பட்ட  கருத்துக்களையை  வெளியிட்டிருக்கின்றனர் என்றும் தெரிவித்த அவர், ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், தமிழ் மக்களை பழிவாங்குவது போன்று அரசாங்கத்தின் செயற்பாடு அமைந்துள்ளதென்றும் சாடினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .