2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

’ஜெனீவா பிரேரணையைத் திருத்த இணக்கம்’

Editorial   / 2019 மார்ச் 08 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணையை, இலங்கைக்குச் சாதகமான முறையில் திருத்துவதற்கு, இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாக, அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (08), நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, ஷெஹான் சேமசிங்க ஆகியோரால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்கு வரவழைக்க, இலங்கை அரசாங்கம் இணங்கவில்லை என்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான தொழில்நுட்ப உதவிகளை மாத்திரமே இலங்கை கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், இராணுவத்தினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட மாட்டாதெனவும், ​அமைச்சர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .